இலங்கை தமிழர் முகாமில் போலீசாரை தாக்க முயன்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது


இலங்கை தமிழர் முகாமில் போலீசாரை தாக்க முயன்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது
x

இலங்கை தமிழர் முகாமில் போலீசாரை தாக்க முயன்ற வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. கடந்த 13-ந்தேதி, முகாமையொட்டி மூடப்பட்ட வாகன கட்டுமான தொழிற்சாலையின் சுவர் ஏறி உள்ளே குதித்து சிலர் திருட முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாவலர் முத்து (வயது 55) என்பவர் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அன்றைய தினமே முகாமைச்சேர்ந்த ரவுடி ராபின்சன் (38) என்பவரை போலீசார் பிடிக்க முயன்ற போது சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் என்பவரை உடைந்த பீர் பாட்டிலால் அவர் குத்தி கொல்ல முயற்சித்தார்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் ராபின்சன் கடந்த 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். திருட முயற்சி மற்றும் போலீசாரை தாக்க முற்பட்ட இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முகாமைச்சேர்ந்த அமுதராஜ் (38) மற்றும் ஜோன் விக்டர் (22) ஆகிய 2 பேரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நேற்று கைது செய்தனர்.

1 More update

Next Story