முதியவரை தாக்கிய 2 பேர் கைது
முதியவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 72). இவர் தர்மநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வெல்டிங் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாலக்கரை தர்மநாதபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த எட்வின் ராஜேஷ்(34), ஹரிஹரன் ஆகியோர் இருதயராஜின் கடையை காலி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த 6-ந்தேதி இருவரும் இருதயராஜுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து இருதயராஜ் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story