காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது


காட்டுப்பன்றியை  வேட்டையாடிய 2 பேர் கைது
x

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே உள்ளது சின்ன செம்மேட்டுப்பட்டி. இந்த கிராமத்தின் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உசிலம்பட்டி வனச் சரக காவல் ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சின்ன செம்மேட்டுப் பட்டியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது வீட்டில் வேட்டையாடிய காட்டுப்பன்றியை சமைத்துக் கொண்டிருந்த முனியாண்டி (வயது27) மற்றும் அவருடன் இருந்த வெள்ளை மலைப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய சின்ன செம்மேட்டுப் பட்டியை சேர்ந்த வசந்த், நடுப்பட்டியை சேர்ந்த பெருமாள் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story