கெங்கவல்லி அருகேபாக்கெட் சாராயம் தயாரித்த 2 பேர் கைது115 லிட்டர் சாராயம் பறிமுதல்


கெங்கவல்லி அருகேபாக்கெட் சாராயம் தயாரித்த 2 பேர் கைது115 லிட்டர் சாராயம் பறிமுதல்
x

கெங்கவல்லி அருகே பாக்கெட் சாராயம் தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்ததுடன், 115 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

கெங்கவல்லி,

பாக்கெட் சாராயம்

கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள பனஞ்சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகே ரமேஷ் என்பவரின் தோட்டத்திற்கு பின்புறம் 2 பேர் பாக்கெட் சாராயம் தயாரித்து கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரையும் போலீசார் மடக்கிபிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கெங்கவல்லி சாணார் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 35), செம்படத் தெருவை சேர்ந்த பிரபாகரன் (30) என தெரியவந்தது.

கைது

மேலும் அந்த 2 பேரும் 3 லாரி டியூப்களில் இருந்து சாராயத்தை எடுத்து 230 சிறிய பிளாஸ்டிக் கவரில் ½ லிட்டர் வீதம் பிடித்து சுமார் 115 லிட்டர் சாராயத்தை பாக்கெட்டுகளில் கட்டிக்கொண்டு இருந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 115 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story