மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது


மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விளாங்காட்டூர் பகுதியில் மதுபாட்டில்கள் விற்றது தொடர்பாக மோகன் (வயது 37), என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் படுகளாநத்தம் கிராமத்தில் மதுபாட்டில்கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (38), என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story