ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது
ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கே.புதுப்பட்டி ஏம்பல் சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் தனிப்படையினர் ரோந்து மேற்கொண்டனர். அப்போது திருமயம் அருகே உள்ள கடியாபட்டி பகுதியை சேர்ந்த கருப்பையா (வயது 42) என்பவர் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரியை ஆன்லைனில் எழுதி விற்பனை செய்தார். அவரை பிடித்து கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் கே.புதுப்பட்டி பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த கே.புதுப்பட்டியை சேர்ந்த படிகாசு (45) என்பவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story