மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:45 PM GMT)

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் செந்தில்குமார் (வயது 34). பஞ்சாயத்து யூனியன் அலுவலகத் தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்பு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி ( 37), பாலசுப்பிரமணியன் (50) ஆகிய இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அந்த 2 பேரையும் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்சி கைது ெசய்தார். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story