தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரின் ஸ்கூட்டரை திருடிய 2 பேர் கைது


தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரின் ஸ்கூட்டரை திருடிய 2 பேர் கைது
x

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரின் ஸ்கூட்டரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

ஸ்கூட்டர் திருட்டு

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சிவதர்ஷினி (வயது 23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஸ்கூட்டரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டு அருகே நிறுத்திவிட்டு பணிக்கு சென்றார்.

பணியை முடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்தபோது அவருடைய ஸ்கூட்டர் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் அவருடைய ஸ்கூட்டரை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவ தர்ஷினி இது பற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

2 பேர் கைது

இது தொடர்பாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் பார்வையிட்டனர்.அப்போது வேலூரைச் சேர்ந்த ஷகில் (36), வாணியம்பாடியை சேர்ந்த அஸ்கர் அலி (27) ஆகியோர் அந்த ஸ்கூட்டரை திருடி இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் இந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் திருடிய ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story