தனியார் நிறுவனத்தில் திருடிய 2 பேர் கைது


தனியார் நிறுவனத்தில் திருடிய 2 பேர் கைது
x
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் மாமாங்கத்தில் 2 தனியார் நிறுவனங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நான்கு சக்கர வாகனங்களில் இருந்து 15 டயர்கள் திருட்டு போயின. இதுகுறித்து தனியார் நிறுவன மேலாளர்கள் பாலாஜி, விஜயகுமார் சூரமங்கலம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனியார் நிறுவனங்களில் வாகன டயர்களை திருடியது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த கணேசன் (வயது 34), அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story