நகை, பணத்தை கொள்ளை அடித்த 2 பேர் கைது


நகை, பணத்தை கொள்ளை அடித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2023 1:15 AM IST (Updated: 13 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியின் வாயில் துணியை திணித்து நகை, பணத்தை கொள்ளை அடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கணபதி

மூதாட்டியின் வாயில் துணியை திணித்து நகை, பணத்தை கொள்ளை அடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நகை, பணம் கொள்ளை

கோவை கணபதி எப்.சி.ஐ. குடோன் ரோடு வரதராஜுலு நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 71). இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மூதாட்டி வீட்டுக்குள் புகுந்தனர். அவர்களை பார்த்ததும் மூதாட்டி கூச்சல் போட முயன்றார். அப்போது மர்ம நபர்கள் சத்தம் போடாமல் இருக்க, அவரது வாயில் துணியை திணித்தனர்.

பின்னர் மூதாட்டி அணிந்து இருந்த 4 பவுன் தங்க வளையல்களை கொள்ளை அடிக்க முயன்றனர். நகை கையில் இருந்து வராததால், தங்க வளையல்களை அறுத்து எடுத்தனர். மேலும் ரூ.45 ஆயிரத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

2 பேர் கைது

இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் கோவை-தடாகம் ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிரஞ்சன் ஷா என்பவரது மகன் கரன்குமார் (வயது 26), கனியபிரசாத் (43) என்பதும், கணபதி எப்.சி.ஐ. ரோடு வரதராஜுலு நகரை சேர்ந்த பாப்பாத்தி வீட்டில் 2 தங்க வளையல்கள் மற்றும் ரூ.45 ஆயிரத்தை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது.

மேலும் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் கடந்த 10-ந் தேதி பாலீஷ் செய்வதாக கூறி பெண்ணிடம் 9 பவுன் நகையை மோசடி செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரையும் சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தங்க நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story