களியக்காவிளையில்ஆசிரியையிடம் நகை பறித்த 2 பேர் கைது


களியக்காவிளையில்ஆசிரியையிடம் நகை பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருேக ஆசிரியையிடம் நகை பறித்த 2 பேரை கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருேக ஆசிரியையிடம் நகை பறித்த 2 பேரை கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

நகை பறிப்பு

களியக்காவிளை நெடுங்கோடு பகுதியை ேசர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவரது மனைவி உஷா மேரி (வயது47). இவர் களியக்காவிளை அருகே உள்ள பரங்காலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5-8-2022 அன்று வகுப்பு முடித்த பின்பு களியக்காவிளை பஸ் நிலையத்தில் இருந்து நெடுங்கோடு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்.

2 பேர் கைது

இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருவனந்தபுரம் அத்தியூர்கோணத்தை சேர்ந்த ஸ்டீபன் மகன் அருண் என்ற ஸ்ரீ குட்டன் (24), அருவிப்பாறை பாசவிளையை சேர்ந்த சத்யன் மகன் பினோய் (21) ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு களியக்காவிளை போலீசார் வாலிபர்களின் வீடுகளில் சென்று அதிரடியாக அவர்களை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் பல நகை பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story