வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது


வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sep 2023 7:30 PM GMT (Updated: 27 Sep 2023 7:30 PM GMT)

வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

அரூர்:-

அரூரை அடுத்த மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). ஓசூரில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று சக்திவேல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த காமாட்சி விளக்கு, சொம்பு, குங்கும சிமிழ், டம்ளர் உள்ளிட்ட, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதேபோல், அ.பள்ளிப்பட்டியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது பண்ணை வீட்ன் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த உண்டியல் பணம் மற்றும் டார்ச்லைட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த 2 திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபட்டதாக சேலம் பெரிய புதூர் காந்திநகரைச் சேர்ந்த பூபாலன் (26), கன்னங்குறிச்சி தாமரைநகரைச் சேர்ந்த அஜீத்குமார் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story