கோழி திருட முயன்ற 2 பேர் கைது


கோழி திருட முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2022 7:00 PM GMT (Updated: 13 Dec 2022 7:01 PM GMT)

கூடலூரில் கோழிகளை திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து 3 கோழிகளை திருட முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு எழுந்த தெய்வேந்திரன் பார்த்தபோது, கோழிகளை 3 மர்ம நபர்கள் திருடிக்கொண்டிருந்தனர். அவர்களில் 2 பேரை பிடித்து கூடலூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த மனோஜ் (வயது 22) முகிலன் (21) என்றும், தப்பியோடியவர் அஜய் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தார். மேலும் தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story