எண்ணெய் கடையில் திருட முயன்ற 2 பேர் கைது
எண்ணெய் கடையில் திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
முசிறி:
முசிறியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் தமிழ்ச்செல்வன்(வயது 29). இவர் முசிறி-துறையூர் சாலையில் மரசெக்கு எண்ணெய் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு எண்ணெய் வாங்க வந்த 2 வாலிபர்கள் தமிழ்ச்செல்வனின் கவனத்தை திசைதிருப்பி, கல்லாபெட்டியில் இருந்து பணத்தை திருட முயன்றனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து முசிறி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தரங்கம்பாடியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் விஜய்(23), ராயப்பேட்டை அரக்கோணத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் ஆனந்த்(32) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story