ஆட்டோ டிரைவரை வெட்டியது தொடர்பாக 2 பேர் கைது


ஆட்டோ டிரைவரை வெட்டியது தொடர்பாக 2 பேர் கைது
x

ஆட்டோ டிரைவரை வெட்டியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

ஆட்டோ டிரைவருக்கு வெட்டு

சென்னை, கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நெடுஞ்செழியன் (வயது 35). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜி (30). இவர்கள் தனது நண்பர்கள் 4 பேர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரை அடுத்த குறும்பிறை பகுதியை சேர்ந்த சரவணன் (38) ஆகியோருடன் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர்- பெருக்கரனை மாநில நெடுஞ்சாலை இரும்புலி சந்திப்பு பகுதியில் மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் சரவணன், ராஜி மற்றும் அவரது நண்பர்கள் தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பட்டாகத்தியை எடுத்து நெடுஞ்செழியனை வெட்டினர்.

2 பேர் கைது

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அங்கு இருந்த பொதுமக்கள் மேல்மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த நெடுஞ்செழியனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சரவணன், ராஜி ஆகியோரை கைது செய்த போலீசார், பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர்.

மேலும் தப்பியோடிய 4 பேரை மேல்மருவத்தூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story