கோவையில் கைதான 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
பெட்ரோல் குண்டுவீசிய வழக்கில் கைதான 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
பெட்ரோல் குண்டுவீசிய வழக்கில் கைதான 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
பெட்ரோல் குண்டுவீச்சு
கோவையில் வி.கே.கே. மேனன் ரோட்டில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கவுண் டம்பாளையம் சேரன் காலனியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 32), துடியலூர் ஆர்.எஸ்.தோட்டம் நேரு வீதியை சேர்ந்த அகமது சிகாபுதீன் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட னர்.
தேசிய பாதுகாப்பு சட்டம்
கைதான 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல்கள் கோவை சிறையில் உள்ள சதாம் உசேன், சிகாபுதீன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
இந்த தகவலை கோவை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது.
சதாம் உசேன் பி.எப்.ஐ. அமைப்பில் இருந்தார். சசிகுமார் கொலை வழக்கில் துடியலூரில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.