குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2023 6:45 PM GMT (Updated: 8 Aug 2023 6:45 PM GMT)

முத்துப்பேட்டையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பின்னத்தூரை சேர்ந்தவர் கண்ணன். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். கடந்த மாதம் வீட்டில் இருந்த அவரது மனைவி சங்கீதாவிடம் மர்ம நபர்கள் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் செயினை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பான வழக்கை முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், அனந்தபத்மநாபன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சீமான், பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கி தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டு பகுதியில் பதுங்கி இருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த நல்லதம்பி மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டில் ஈடுபட்டது இவர்கள் தான் என்பது தெரியவந்ததை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீக்கு பரிந்துரை செய்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் நல்லதம்பி, விக்னேஷ் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.


Next Story