மேட்டூர் ரவுடி கொலையில் 2 பேர் சிக்கினர்


மேட்டூர் ரவுடி கொலையில் 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:27 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் ரவுடி கொலையில் 2 பேர் சிக்கினர். மேலும் சிலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.

சேலம்

மேட்டூர்:

ரவுடி வெட்டிக்கொலை

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மகன் சிபி (வயது25). இவர், மீது கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. மேலும் இவரது பெயர் போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு சிபி, மேட்டூர் புதுச்சாம்பள்ளி குருவா காடு பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

போலீசாருடன் வாக்குவாதம்

தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மரியமுத்து மற்றும் கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அதற்கு சிபியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிபியின் உடலை எடுத்து செல்ல விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சிபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.

பழிக்குப்பழியாக...

விசாரணையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கருமலைக்கூடல் பகுதியை செய்த ராஜேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக சிபி கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சிபி கொலையில் 2 பேர் சிக்கினர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இருந்தாலும் கொலையாளிகளை பிடிக்க சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவின்பேரில் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு் மரியமுத்து தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரன் (கருமலைக்கூடல்), சண்முகம் (மேச்சேரி) மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story