கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது


கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

மேலப்பாளையத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

மேலப்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேலப்பாளையம் அருகே குறிச்சியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தச்சநல்லூர் திருத்து நடுத்தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ராமசுப்பிரமணியன் (வயது 27) மற்றும் 15 வயது சிறுவன் என்பதும், கஞ்சா விற்றுக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 15 வயது சிறுவன் அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான்.


Next Story