இருவேறு விபத்துகளில் கூலித்தொழிலாளிகள் 2 பேர் பலி


இருவேறு விபத்துகளில் கூலித்தொழிலாளிகள் 2 பேர் பலி
x

நாமக்கல் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் கூலித்தெழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாமக்கல்

கூலித்தொழிலாளி

ராசிபுரம் அருகே உள்ள 85.ஆர் குமாரபாளையத்தை சேர்ந்தவர் வீரன் (வயது 70). கூலித்தொழிலாளி. நேற்று காலை புதுச்சத்திரம் அருகே உள்ள பாச்சலுக்கு கூலி வேலைக்குச் செல்ல பஸ்சில் சென்றுள்ளார். பின்னர் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சலில் பஸ்சில் இருந்து இறங்கி, சாலையைக் கடப்பதற்காக நடந்து சென்றார்.

அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் வீரன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வீரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் மோதி தொழிலாளி சாவு

ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜு (67). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு ராஜு அணைப்பாளையம் புறவழிச்சாலை ஆலமரம் அருகில் ரோட்டை கடந்து நடந்து சென்றார். அப்போது புறவழிச் சாலையில் வேகமாக வந்த கார் ராஜு மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் ஆகியோர் ராஜுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனார்.

மேலும் இது பற்றி போலீசார் கார் டிரைவர் கோவிந்தராஜ் (37) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story