இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி


இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
x

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மிளகாய் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). இவரது மனைவி நந்தினி. குழந்தைகள் இல்லை. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் கார்த்திக் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ஆந்திரா நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையை சேர்ந்தவர் சங்கர் (62). இவர் அதே ஊரில் அரிசந்திராபுரம் சாலையில் இஸ்திரி போடும் கடை வைத்திருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம் போல கடையை திறக்க தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் சின்னம்மாபேட்டை நான்கு முனை சந்திப்பில் வந்த போது நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார்.

இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story