ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

குட்கா கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

வாலாஜா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக குட்கா கடத்தலில் ஈடுபட்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வேசீர்ராம், பீர்ஷா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்களின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் வளர்மதி, 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், வேசீர்ராம், பீர்ஷா ஆகிய 2 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story