வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருச்சி

திருச்சி உறையூர் கல்நாயக்கன்தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 28). கொத்தனாரான இவர் நேற்று மாலை உறையூரில் இருந்து பஸ் ஏறி மத்திய பஸ் நிலையம் சென்று கொண்டு இருந்தார். அப்போது உறையூர் குறத்தெரு அருகே பஸ் வளைவில் திரும்பியபோது, பின்பக்க படிக்கட்டில் நின்ற ஆனந்த் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஆனந்த் இறந்தார்.

இதேபோல் முசிறி ஆமூர் மணப்பாளையத்தை சேர்ந்தவர் அர்ஜூன்(19). இவர் துவாக்குடி அருகே ஒரு கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர் சரவணனுடன் கடந்த 21-ந் தேதி பகல் 2.30 மணி அளவில் மேலப்புதூர் சுரங்கப்பாதை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். சரவணன் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களுடைய மோட்டார் சைக்கிள் சுவரில் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அர்ஜூன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story