கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி


கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
x

செங்கம் அருகே லாரியும் ேமாட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் அருகே லாரியும் ேமாட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கல்லூரி மாணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள விருப்பாச்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 21). இவர் திருப்பத்தூர் பகுதியில் தனியார் கல்லூரியில் கலை அறிவியல் படித்து வருகிறார்.

இவருடைய உறவினர் பெயரும் கவுதம் (24). இருவரும் நேற்று திருவண்ணாமலையிலிருந்து கல்லாவி கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

செங்கம் அருகே உள்ள ரோடு கரியமங்கலம் பகுதியில் சென்றபோது ஓசூரில் இருந்து கும்பகோணம் நோக்கிச்சென்ற தக்காளி மற்றும் காய்கறி ஏற்றி வந்த லாரியும் இவர்கள் வந்த மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாணவர் கவுதமும், அவரது உறவினரான கவுதமும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

பிரேத பரிசோதனை

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்தபோது இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து 2 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து குறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



Next Story