வெவ்வேறு விபத்துகளில் துணிக்கடை ஊழியர் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் துணிக்கடை ஊழியர் உள்பட 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் துணிக்கடை ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருச்சி

வெவ்வேறு விபத்துகளில் துணிக்கடை ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

துணிக்கடை ஊழியர்

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த ஒக்கரையை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 45). இவர் துணிக்கடையில் ஊழியர் வேலை செய்து வந்தார். நேற்று காலையில் கலைவாணன் துறையூர் வந்து விட்டு மீண்டு்ம் ஒக்கரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஆத்தூரில் இருந்து வந்த ஜீப்பும், கலைவாணன் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கலைவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நேற்று பகல் முழுவதும் மழை பெய்ததால் வாகனங்களில் சரியாக பிரேக் பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால்தான் இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

முசிறியை அடுத்த நெய்வேலி கடைவீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் துறையூர் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆலத்துடையான் பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் முகத்தீஸ்வரன் (19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜேந்திரன் திருச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனிற்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயிண்டர் காயம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா ஆத்தூர் சாலையில் உள்ள வி.க.நகரை சேர்ந்தவர் அருண் ரிச்சர்ட் ராஜ் (31). பெயிண்டரான இவர் தொட்டியத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏமூர்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்தலாரி மோதியதில் ரிச்சர்ட் ராஜ் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் லாரி டிரைவர் திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்த லாரன்ஸ் (41) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story