தபால் ஊழியர் உள்பட 2 பேர் பலி


தபால் ஊழியர் உள்பட 2 பேர் பலி
x

செஞ்சி அருகே நடந்த தனித்தனி விபத்தில் தபால் ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

விழுப்புரம்

செஞ்சி

பஸ் மோதல்

செஞ்சியை அடுத்த கலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தன்(வயது 65). ஓய்வு பெற்ற தபால் ஊழியரான இவர் நேற்றுமுன்தினம் இரவு செஞ்சியில் இருந்து கலையூருக்கு பஸ்சில் வந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது செஞ்சியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த அரசு பஸ் கந்தன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முன்றனர். தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் அவர்களை சமாதானம் செய்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செஞ்சி அடுத்த வல்லம் என்ற ஊரை சேர்ந்தவர் செல்லன் மனைவி தனலட்சுமி (வயது 50). இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது செஞ்சியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படு காயமடைந்த தனலட்சுமியை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story