வெவ்வேறு விபத்துகளில் டாஸ்மாக் பார் ஊழியர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் டாஸ்மாக் பார் ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
வெவ்வேறு விபத்துகளில் டாஸ்மாக் பார் ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
டாஸ்மாக் பார் ஊழியர்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வாழையூர் அரிசன தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). இவர் சிறுகனூரில் உள்ள அரசு மதுபான கடை பாரில் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் ரெட்டி மாங்குடி பிரிவு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் முருகேசன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரையும், அதை ஓட்டிய டிரைவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் கல்லக்குடி சோதனைசாவடியில் சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி விசாரணை செய்தார். அப்போது, சிறுகனூரில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காரை பறிமுதல் செய்தும், காரை ஓட்டி வந்த புதுச்சேரியை சேர்ந்த அய்யனார் என்பவரையும் பிடித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கொள்ளிடம் டோல்கேட்
திருச்சியை அடுத்த உத்தமர்சீலி அருகே உள்ள பனையபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சேதுபதி (வயது 42). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.
நம்பர் ஒன் டோல்கேட் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது சேதுபதி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதினார். இதில் கீழே விழுந்த அவர் உடலில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






