பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை


பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை
x

விளாத்திகுளம் அருகே பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 68).

இந்தநிலையில் ராஜாமணி வீட்டின் கதவை காற்றுக்காக திறந்து வைத்து நேற்று முன்தினம் தூங்கினார். நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், திடீரென்று அரிவாளால் ராஜாமணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் அங்கிருந்து ஓடிவந்து அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் வந்து விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தாா்.

பிணமாக கிடந்த நபர்

அப்போது, அங்கிருந்த தனியார் பஸ் ஊழியர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள வீட்டின் முன்பகுதியில் ரத்தக்கறை இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது, அங்கும் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

மற்றொரு கொலை

தொடர்ந்து இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பிணமாக கிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி (50) என்பது தெரியவந்தது.

பொன்னுச்சாமியின் மனைவி மதுரைக்கு சென்றுவிட்டதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்ேபாது அங்கு வந்த மர்மநபர் வீட்டில் புகுந்து பொன்னுச்சாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் ெகாலை செய்தது தெரியவந்தது.

காரணம் என்ன?

இதையடுத்து கொலை செய்யப்பட்ட ராஜாமணி, பொன்னுச்சாமி ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த 2 கொலைகளையும் ஒரே நபர் செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பரபரப்பு

இதற்கிடையே சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story