அரசு மருத்துவமனையில் முதியவர் உள்பட 2 பேர் திடீர் சாவு


அரசு மருத்துவமனையில் முதியவர் உள்பட 2 பேர் திடீர் சாவு
x

அரசு மருத்துவமனையில் முதியவர் உள்பட 2 பேர் இறந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த 15-ந்தேதி திடீரென்று இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பினர். இறந்தவர் கைலி மட்டும் அணிந்துள்ளார். மேலும் இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த 10-ந்தேதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பெரம்பலூர் வ.உ.சி. நகரை சேர்ந்த சண்முகத்தின் மகன் சுரேஷ்குமார்(45) என்று கூறி, உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நபர் கடந்த 15-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆனால் அவரது உடலை வாங்க குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் வராததால், அவரது உடலையும் பெரம்பலூர் போலீசார் மருத்துவமனை பிரேத கூடத்தில் வைத்துள்ளனர். மேலும் சுரேஷ்குமாருக்கு குடும்பத்தினர், உறவினர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story