திருச்சி அருகே அரசு பஸ் மோதியதில் தே.மு.தி.க.நிர்வாகி உள்பட 2 பேர் பலி
திருச்சி அருகே அரசு பஸ் மோதியதில் தே.மு.தி.க.நிர்வாகி உள்பட 2 பேர் பலியானார்கள்.
திருச்சி அருகே அரசு பஸ் மோதியதில் தே.மு.தி.க.நிர்வாகி உள்பட 2 பேர் பலியானார்கள்.
நண்பர்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை நல்லாம்பிள்ளை கிராமம் கிழக்கு வெள்ளிவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 44). திருச்சி தெற்கு மாவட்டம் வையம்பட்டி வடக்கு ஒன்றிய தே.மு.தி.க. பொருளாளரான இவரும், அவரது நண்பருமான மணப்பாறை அமயாபுரம் சரவணம்பட்டியை சேர்ந்த கனகராஜ் (45) என்பவரும் நேற்று மொபட்டில் திருச்சி வந்தனர்.பின்னர் இருவரும் மீண்டும் மொபட்டில் மணப்பாறைக்கு சென்றனர். இனாம்குளத்தூர் அருகே வடசேரி சாலையை கடக்க முயன்ற போது, பழனியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ் ராஜரத்தினம், கனகராஜ் ஆகியோர் வந்த மொபட்டின் மீது மோதியது.
சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த இனாம்குளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.