வெவ்வேறு விபத்தில் ஊராட்சி செயலர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்தில் ஊராட்சி செயலர் உள்பட 2 பேர் இறந்தனர்.
வெவ்வேறு விபத்தில் ஊராட்சி செயலர் உள்பட 2 பேர் இறந்தனர்.
லாரி மோதியது
மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராயப்பன். இவரது மனைவி சாந்தா மார்க்கரெட் மேரி. இந்த தம்பதியின் மகள் ஹென்சினி பிரியா (வயது 17). இந்த நிலையில் தாயும், மகளும் மொபட்டில் மஞ்சம்பட்டியில் இருந்து பொத்தமேட்டுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
நொச்சிமேடு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஹென்சினி பிரியா ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
பலத்த காயம் அடைந்த . சாந்தா மார்க்கரெட் மேரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ஹென்சினி பிரியா பி.எஸ்.சி.நர்சிங் படித்து வந்தார்.
ஊராட்சி செயலர் பலி
முசிறி சின்னக்கொடுந்துறையை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 55). இவர் அய்யம்பாளையம் ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தார். கடந்த 4-ந் தேதி முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். முசிறி நகராட்சி குப்பை கிடங்கு அருகே உள்ள வேகத்தடையில் வரும்போது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.