விபசாரம் செய்தவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


விபசாரம் செய்தவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

விபசாரம் செய்தவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி

திருச்சி பழைய பால்பண்ணை மற்றும் வரகனேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து 2 இளம் பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்த ராஜேந்திரன் (வயது 57) என்பவரை காந்திமார்க்கெட் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில், அவர் மீது மற்றொரு வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜேந்திரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதுபோல் அரியமங்கலம் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் பெண்ணை ஆபாசமாக பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கணேசன் (25), குலாம்தஸ்தகீர் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் குலாம் தஸ்தகீர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் கணேசன் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர் என்பது தெரியவந்ததால், தற்போது கணேசனும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா பிறப்பித்துள்ளார்.


Next Story