கள்ளக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து வங்கி மேலாளர் உள்பட 2 பேர் படுகாயம்


கள்ளக்குறிச்சி அருகே  கார் கவிழ்ந்து வங்கி மேலாளர் உள்பட 2 பேர் படுகாயம்
x

கள்ளக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து வங்கி மேலாளர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி


சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகன் விக்னேஷ் (வயது 30). சேலம் மாவட்டம் பாப்பம்பட்டியில் உள்ள கனரா வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது காரில் பாப்பம்பட்டியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். காரை சேலம் மாவட்டம் சின்னேரி வைலக்கோட்டையை சேர்ந்த சுரேஷ் (32) என்பவர் ஓட்டினார். கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விக்னேஷ், டிரைவர் சுரேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதைபார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story