விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
தனித்தனி சம்பவத்தில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம்
விவசாயி
தியாகதுருகம் அருகே சோமநாதபுரத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் குமார் (வயது 42) விவசாயி, சம்பவத்தன்று இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
விழுப்புரம் அருகே உள்ள பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் மனைவி ராஜகுமாரி(32). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜகுமாரி, விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.