விவசாயி உள்பட 2 பேர் பலி
தனித்தனி விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
விக்கிரவாண்டி,
வளவனூர் அருகே உள்ள இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் (வயது 73) விவசாயி, இவர் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக பஸ்சில் சென்றார். பின்னர் முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பலராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மனைவி சந்திரா (65). இவர் திண்டிவனம்- விழுப்புரம் சர்வீஸ் சாலையில் பயணியர் விடுதி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சந்திரா சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரா நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.