கார் மீது லாரி மோதிய விபத்தில், பேக்கரி கடை உரிமையாளர் உள்பட 2 பேர் பலி
செங்கம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பேக்கரி கடை உரிமையாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
செங்கம்
செங்கம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பேக்கரி கடை உரிமையாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கார் மீது லாரி மோதியது
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 35). இவர் புதுச்சேரியில் பேக்கரி கடையை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து விஜயகுமார் மற்றும் அவரிடம் பணிபுரியும் பீமன் (50) உள்பட 4 பேர் புதுச்சேரியில் இருந்து திருப்பத்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கோவையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி ஜல்லி மிஷின் ஏற்றி வந்த லாரி திடீரென் எதிர்பாராத விதமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
2 பேர் பலி
இந்த விபத்தில் காரின் பயணம் செய்த விஜயகுமார் மற்றும் பீமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த விஜயகுமார் மற்றும் பீமன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து மேல்செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.