மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது


மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
x

கண்ணமங்கலம் அருகே மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே மேல்நகர் கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி செந்தாமரை (வயது 48) என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்றார்.

அப்போது கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

இதேபோல் கீழ்நகர் கிராமத்தில் அருள் (57) என்பவர் தனது பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் விற்றார்.

அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் கைதான 2 பேர் மீது கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story