பெண் கொலை வழக்கில் 2 பேர் சரண்


பெண் கொலை வழக்கில் 2 பேர் சரண்
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே பெண் கொலை வழக்கில் 2 பேர் சரண் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் ஆசாரிமடம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் என்பவரின் மனைவி பவித்ரா (வயது 26). இவரை நேற்று முன்தினம் மாலை அவரின் சித்தப்பா மகன் மணிகண்டன் (23) என்பவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தின்போது மணிகண்டனுடன் உடன் வந்து கொலை செய்ய தூண்டியதாக அவரின் தந்தை முருகேசன், மாமா திரவியம் மகன் அஜித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த இருவரும் நேற்று காலை உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாக மாவட்ட போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Related Tags :
Next Story