குளத்து மண் அள்ளிய 2 பேர் கைது


குளத்து மண் அள்ளிய 2 பேர் கைது
x

வீரவநல்லூர் அருகே அனுமதியின்றி குளத்து மண் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூரை அடுத்த புதூர் சாலையில், வீரவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, பொக்லைன் எந்திரம் மூலம் அனுமதியின்றி குளத்து மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைடுத்து டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்த அகஸ்தியர்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் (வயது 34), அம்பை- ஊர்க்காடு நடுத்தெரு மேல காலனியைச் சேர்ந்த இளையராஜா (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.Next Story