சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
தொட்டியம்:
தொட்டியம் அருகே கார்த்திகைப்பட்டியில் அழகுநாச்சியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் தொட்டியம் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சியதாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், கார்த்திகைப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ்(40), கீழ கார்த்திகைப்பட்டி குடித்தெருவை சேர்ந்த சேகர் மகன் தமிழரசன்(28) என்பதும், அவர்கள் சாராயம் காய்ச்சியதும், மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் போட்டிருந்ததும், விற்பனைக்காக 3 லிட்டர் சாராயம் வைத்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story