வண்டலூரில் குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது


வண்டலூரில் குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது
x

வண்டலூரில் குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் சிங்காரத்தோட்டம் அருகே ஓட்டேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். செல்வ விநாயகர் கோவில் வழியாக வந்த ஒரு வாகனத்தை போலீசார் மடக்கி அதில் இருந்தவர்களிடம் விசாரித்த போது வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். மேலும் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி இரும்பு கம்பியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனையடுத்து வாகனத்தில் இருந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஓட்டேரி போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சியை சேர்ந்த தினேஷ் (வயது 36), அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ( 38) ஆகியோரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

==============


Next Story