அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது


அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
x

அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

நாட்டு துப்பாக்கி

பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்பேரில், பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில் வனக்குழுவினர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெங்கநாதபுரம் பகுதியில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சோழமுத்துவின் மகன் மணிகண்டன் (வயது 24), நடேசன் (67) என்பதும், அவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும், அந்த துப்பாக்கிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் மேல் விசாரணைக்காக அவர்களை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்


Next Story