மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட படந்தாலுமூடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 55) மற்றும் குழித்துறை பகுதியை சேர்ந்த ஜீவன் (50) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story