மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

களியக்காவிளை அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட படந்தாலுமூடு பகுதியில் களியக்காவிளை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் குழித்துறை பரம்புவிளையை சேர்ந்த ரகுவரன் (வயது 72) என்பவரின் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடையில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தொியவந்தது. இதையடுத்து ரகுவரனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல குழித்துறை பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட மடிச்சல் பகுதியை சேர்ந்த சத்யதாஸ் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story