மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வளையாபதி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜேஸ்வரன்(வயது 55) மற்றும் நல்லண்ணம் மேற்கு தெருவை சேர்ந்த அண்ணாதுரை(53) ஆகியோர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story