மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதனம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலூர் பெரியார் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த வைத்தியநாதன் மகன் மதன்மோகன்(வயது 34) என்பவர் மணலேரி செல்லும் சுடுகாட்டு பகுதியிலும், சென்னிவனம் மேட்டு தெருவை சேர்ந்த முருகானந்தம்(48) என்பவர் கல்லங்குறிச்சி ரவுண்டான பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story