மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமையன் மகன் மணிவண்ணன்(வயது 35), சோழங்குறிச்சி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமன் மகன் பாரதிராஜா(31) ஆகியோர் அந்தந்த பகுதிகளில் மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story