மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

சிவகிரியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகிரி அம்பேத்கர் சிலை அருகே ஆர்.சி. கோவில் தெருவை சேர்ந்த சாந்த மூர்த்தி (வயது 34) என்பவர் பஸ் நிலையம் அருகே மதுப்பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் சிவகிரி அருகே ராயகிரி தெற்கு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (75) என்பவர் சிவகிரி பஸ் நிலையம் அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story