சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x

மணல்மேடு பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேட்டை அடுத்த கடலங்குடி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், கடலங்குடி மெயின் ரோட்டை சேர்ந்த முருகன் மகன் பாலாஜி (வயது23), கடலங்குடி சுக்கிராபுரம் கண்ணுசாமி மகன் கலைவாணன் (23) என்பதும், இவர்கள் சாராயம் விற்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.



Related Tags :
Next Story