புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது
x

திட்டக்குடியில் புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

ராமநத்தம்,

திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் திட்டக்குடி பகுதிக்குட்பட்ட பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை யாரேனும் பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்களா? என அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தேரடி வீதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடை உரிமையாளரான அமுதா(வயது 60) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் வதிர்ஷ்டபுரம் பகுதியில் கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த பாலு(60) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story